ஹாலோவீன் பண்டிகை: கனடிய தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

வரவிருக்கும் Halloween பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் மற்றும் கனடிய தயாரிப்புகளை கனடா தயாரிப்புக்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

NextDoor Canada நிறுவனத்திற்காக Angus Reid நடத்திய கணக்கெடுப்பில், 59 சதவீத கனடியர்கள் ஹாலோவீன் பண்டிகையின் போது உள்ளூர் வணிகங்கள் மற்றும் கனடா தயாரிப்பு பொருட்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுடனான வர்த்தக வரி மோதல்கள் (Tariff tensions) காரணமாக இந்த எண்ணம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Winnipeg நகரில் Food Fare எனும் மளிகைக் கடையை நடத்தி வரும் ரேம்சி ஸெய்ட் (Ramsey Zeid), கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி மக்களுக்கு உதவி வருகிறார்.

இருப்பினும், ஹாலோவீன் மிட்டாய்கள் பல கனடாவில் தயாரிக்கப்பட்டாலும், அவற்றின் மூலப்பொருட்களும் தாய் நிறுவனங்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவையாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், இம்முறை 88 சதவீத மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு 100 டொலருக்கும் குறைவாகவே செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles