Toronto வில் எரிபொருள் விலை வீழ்ச்சி: புதன்கிழமை லீட்டருக்கு 11 சதம் குறைகிறது!

கனடாவின் பிரதான Toronto பகுதியில் (Greater Toronto Area – GTA) எதிர்வரும் புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லீட்டருக்கு 11 சதம் வரை கணிசமாகக் குறையும் என கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் லீட்டர் ஒன்று 167.9 சதமாகவும், டீசல் லீட்டர் ஒன்று 235.9 சதமாகவும் குறையும் என (Canadians for Affordable Energy) அமைப்பின் ஆய்வாளர் டான் மெக்டீக் (Dan McTeague) தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் பதிவான மிகக் குறைந்த எரிபொருள் விலை இதுவாகும்.

ஹொர்முஸ் நீரிணை (Straits of Hormuz) கடல்சார் போக்குவரத்து மீள ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் ஆகியவை சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விலை குறைப்பினால் வாகன ஓட்டிகள் ஒருமுறை எரிபொருள் நிரப்பும் போது 6 முதல் 10 டொலர்கள் வரையிலும், லொரி ஓட்டுநர்கள் 100 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles