Torontoவின் Gay Village பகுதியில் அமைந்துள்ள சர்ச்ச் வீதியில் (Church Street) நடைபெற்ற Halloween on Church வீதி விழாவில் சுமார் 50,000 பேர் வரை கலந்துகொண்டதால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக, எதிர்கால நிகழ்வுகளை சிறந்த முறையில் கட்டமைப்பு செய்ய ஆய்வு நடத்தப்போவதாக மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இவ்விழாவில் அதிகளவில் மக்கள் கூடியதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பீதியடைந்ததானர்.
இதனிடையே பிக்பொக்கெட் மற்றும் கைப்பேசி திருடர்களும் கைவரிசை காட்டியதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த Toronto காவல்துறைத் பணிப்பாளர் Myron Demkiw மற்றும் மேயர் ஒலிவியா சௌ ஆகியோர், எதிர்காலத்தில் இதுபோன்ற தெரு விழாக்களை பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டுடனும் நடத்துவது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களான Church Wellesley Village –BIA அமைப்புடன் இணைந்து ஆராயவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
