ஸ்கார்பரோ கார் திருத்தும் நிலையத்தில் தீ வைப்பு: பல வாகனங்கள் சேதம்!

கனடா, Scarborough பகுதியில் உள்ள கார் திருத்தும் நிலையத்தில் (Mechanic Shop) ஏற்பட்ட தீ விபத்து முன்கூட்டியே திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Steeles Avenue East மற்றும் Middlefield Road சந்திப்பிற்கு அருகில் உள்ள குறித்த நிலையத்தில், இன்று அதிகாலை 4:30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீப்பரவலினால் அங்கிருந்த பல வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தீ வைப்புச் சம்பவமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles