கனடாவில் serial-killer சிறையில் உயிரிழப்பு – கொடூரமான காலக்கட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி!

கனடாவின் New Brunswick மாகாணத்தையே 1980-களில் நடுங்க வைத்த “Monster of the Miramichi” என்று அழைக்கப்படும் தொடர் கொலைகாரன் Allan Legere, தனது 78-வது வயதில் சிறையில் உயிரிழந்துள்ளார். 

ஆல்பெர்ட்டாவில் உள்ள Edmonton Institution சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த திங்கட்கிழமை உயிரிழந்ததாக கனடிய சிறைச்சாலைத் துறை (Correctional Service Canada) உறுதிப்படுத்தியுள்ளது.

1989-ஆம் ஆண்டு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச் சென்ற இவர், ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்து 4 பேரைக் கொடூரமாகக் கொலை செய்தார்.

1991-ஆம் ஆண்டு இவருக்கு நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதுடன், “ஆபத்தான குற்றவாளி” (Dangerous Offender) எனவும் அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு இறுதியில் இவர் முன்வைத்த பிணை (Parole) கோரிக்கை, சமூகத்திற்கு இன்னும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இவரது மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு கொடூரமான காலக்கட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles