ஸ்காபரோ சவுத்வெஸ்ட் லிபரல் கட்சி வேட்பாளர் தேர்வு மேல்முறையீடு தள்ளுபடி – அஹ்சானுல் ஹபீஸ் வெற்றியாளராக உறுதி!

கனடாவின் ஒன்ராறியோ லிபரல் கட்சியின் (Ontario Liberal Party – OLP) ஸ்காபரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) தொகுதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சுயாதீன நடுவர் குழு தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன், அஹ்சானுல் ஹபீஸ் (Ahsanul Hafiz) உண்மையான வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 9ஆம் திகதி நடைபெற்ற வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில், நாடாளுமன்ற உறுப்பினர் நதானியேல் எர்ஸ்கைன்-ஸ்மித் (Nathaniel Erskine-Smith) வர்த்தகரான அஹ்சானுல் ஹபீஸிடம் (Ahsanul Hafiz) நூலிழையில் தோல்வியடைந்தார்.

எனினும், வாக்கு எண்ணிக்கையில் தொழில்நுட்பத் தவறுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, மே 12 அன்று எர்ஸ்கைன்-ஸ்மித் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த மூன்று பேர் கொண்ட குழு, கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், வாக்கெடுப்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்.

எனவே, எந்தவொரு முறைகேடுகளும் நடக்கவில்லை என்றும் கூறி மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒன்ராறியோ லிபரல் கட்சி தங்களுடைய முழு கவனமும் இனி ஸ்காபரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) இடைத்தேர்தலை நோக்கித் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles