கனடாவில் உள்ள Princess Margaret Cancer Foundation-க்கு அடையாளம் தெரியாத கொடையாளி ஒருவர் 100 மில்லியன் டொலர் ($100 Million) பிரம்மாண்ட நன்கொடையை வழங்கியுள்ளார்.
கனடிய புற்றுநோய் ஆராய்ச்சி வரலாற்றிலேயே வழங்கப்பட்ட மிகப்பரிய தனிநபர் நன்கொடை இதுவாகும்.
புற்றுநோய் ஆராய்ச்சியை விரைவுபடுத்தவும், செயற்கை நுண்ணறிவு (AI), மரபியல் தொழில் நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்கொடையைத் தொடர்ந்து, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பை மேலும் வலுப்படுத்த 2.5 பில்லியன் டொலர் ($2.5 Billion) நிதி திரட்டும் பிரசாரத்தை The Princess Margaret Cancer Foundation அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
Princess Margaret Cancer Centre-ன் தலைமைச் நிர்வாக அதிகாரி Miyo Yamashita மற்றும் சிகிச்சை பெற்று மீண்ட Beth Johnston ஆகியோர், இந்த நன்கொடை பல உயிர்களைக் காப்பாற்றவும், நோயாளிகளின் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் எனத் தெரிவித்துள்ளனர்.
