கனடாவின் மார்க்கம் (Markham) பகுதியில் Highway 7 இல், அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக மதுபோதையில் காரை இயக்கி கோர விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்டோப்வில் (Stouffville) பகுதியைச் சேர்ந்த கரோலின் நீல்சன் (Carolyn Nielsen – 43) என்ற பெண்மணி, மணிக்கு 60 கி.மீ வேக வரம்பு கொண்ட வீதியில் 123 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தி எதிரே வந்த காரை மோதினார்.
இதில் 68 வயதான லாயிட் செட்டோ (Lloyd Szeto) உயிரிழந்ததுடன், அவரது மனைவியும் பலத்த காயமடைந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கரோலின் நீல்சனுக்கு (Carolyn Nielsen) 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை முடிந்து வெளியான பிறகு, அவர் மேலும் 8 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்த லாயிட் செட்டோவின் (Lloyd Szeto) குடும்பத்தாரிடம் தனது செயலுக்காகத் தலைகுனிந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகளுக்கு இத்தீர்ப்பு மற்றுமொரு கசப்பான சான்றாக அமைந்துள்ளது.
