வெனெசா ட்ரம்பிற்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!

அமெரிக்க முன்னாள் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ட்ரெம்ப் ஜூனியரின் (Donald Trump Jr.) முன்னாள் மனைவியும், ஐந்து பிள்ளைகளின் தாயாருமான வெனெசா ட்ரம்ப் (Vanessa Trump) தனக்கு மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இது யாரும் எதிர்பாராத ஒரு செய்தி என்றாலும், எனது மருத்துவக் குழுவுடன் இணைந்து இதற்கான சிகிச்சைத் திட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வாரத் தொடக்கத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தற்போது தனது உடல்நலம் மற்றும் மீட்சியில் கவனம் செலுத்தி வருவதால் தமக்கான தனிப்பட்ட சுதந்திரத்தை (Privacy) மதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது 48 வயதாகும் வெனெசா ட்ரம்ப், கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு டொனால்ட் ட்ரெம்ப் ஜூனியரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இவர்களுக்கு 19 வயதான காய் ட்ரம்ப் (Kai Trump) உட்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

வெனெசா ட்ரம்ப், பிரபல கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் (Tiger Woods) உடன் கடந்த மார்ச் மாதம் முதல் டேட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகளான இவான்கா ட்ரம்ப் (Ivanka Trump) உட்பட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles