வடகிழக்கு கல்கரியில் மரம் முறிந்து விழுந்து சொகுசு கார் சேதம்!

நெடுநாட்களாக நீடிக்கும் பலத்த மழையுடனான காற்று காரணமாக, வடகிழக்கு கல்கரியில் (NE Calgary) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் (SUV) ஒன்றின் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அல்பர்ட்டா (Southern Alberta) பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடுமையான புயல், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, வடகிழக்கு கல்கரியின் ஒயிட்ஹார்ன் (Whitehorn) பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற SUV ரக காரின் முன்பகுதியின் (Hood) மீது மரம் விழுந்து கிடப்பதை கண்ட அதன் உரிமையாளர், அதிர்ச்சியடைந்து உடனடியாக 911 அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக்குழுவினர், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

கார் பலத்த சேதமடைந்ததால் அந்தப் பெண்ணால் அன்று வேலைக்குச் செல்ல முடியவில்லை.

அல்பர்ட்டாவின் சில பகுதிகளில் 40 முதல் 135 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ள நிலையில், கல்கரி நகருக்கான மழை எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.

அத்துடன், போவ் (Bow River) மற்றும் எல்போவ் (Elbow River) ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் ஆற்றங்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கல்கரி தீயணைப்புத் துறை (Calgary Fire Department) அறிவுறுத்தியுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles