Toronto U.S. Consulate மீதான தாக்குதல் – 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; தாக்குதலுக்கு பணம் கொடுத்தது யார்?

Toronto நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட சமீபத்திய துப்பாக்கிச் சூடு, பணத்திற்காக குற்றங்களைச் செய்யும் criminals-for-hire வலையமைப்புடன் தொடர்புடையது என Toronto Police தெரிவித்துள்ளது.

ஜூலை 27ஆம் திகதி அதிகாலை 4.46 மணியளவில் University Avenue-இல் உள்ள U.S. Consulate மீது ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கட்டடத்தின் முன்பகுதியில் குண்டுத் தாக்கத்தால் சேதம் ஏற்பட்டாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்திலிருந்து தப்பிச் சென்ற வெள்ளை Honda Accord காரை பொலிசார் துரத்தியபோதும், அது மணிக்கு 140 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் சென்றதால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துரத்தல் கைவிடப்பட்டது.

இந்த வழக்கில் 19 வயதான Xen-Ul-Abdeen Syed எனும் இளைஞனும் 15 வயது சிறுவனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் பெயரை கனடிய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது. இருவரும் துப்பாக்கி, தீவைப்பு மற்றும் திருடப்பட்ட சொத்து தொடர்பான பல குற்றச்சாட்டுகளையும், சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்படும் இடம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றனர். குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

encrypted messaging apps மூலம் இந்த இளைஞர்களைத் தொடர்புகொண்டு, U.S. Consulate மீது தாக்குதல் நடத்த பணம் வழங்கப்பட்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

Toronto Police ஏற்கனவே இதுபோன்ற வலையமைப்புகளில் இளைஞர்கள் பணத்திற்காக துப்பாக்கிச் சூடுகளை நடத்தவும், பணம் பெறுவதற்கான ஆதாரமாக தாக்குதலை வீடியோ பதிவு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கு பணம் கொடுப்பது யார்? U.S. Consulate ஏன் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. 

அந்த வலையமைப்பின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிப்பதே தற்போதைய விசாரணையின் முக்கிய நோக்கம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles