ஒரே வாரத்தில் பெருமழை — வெள்ளத்தில் மூழ்கிய Niagara திராட்சைத் தோட்டங்கள்!

ஒன்ராறியோவின் Niagara பிராந்தியத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஒரே வாரத்தில், அந்தப் பகுதியில் வழக்கமாக ஓராண்டில் பதிவாகும் மழையின் சுமார் நான்கில் ஒரு பங்கு பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில திராட்சைத் தோட்டங்களில் மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை நீர் தேங்கியுள்ளதுடன், மதுபான உற்பத்தி நிலையங்களிலும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

St. Catharines மற்றும் Lincoln நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ஒன்ராறியோ முதல்வர் Doug Ford, மக்களையும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்தார்.

இந்த வெள்ளத்தால் திராட்சை உற்பத்தி பாதிக்கப்படுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாகாண அரசு நிவாரண உதவியை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles