றொரண்டோவில் பதற்றம் – நோர்த் யோர்க்கில் காணாமல் போன 14 வயது சிறுமியைத் தேட அதிநவீன ட்ரோன்கள், குதிரைப்படை குவிப்பு!

றொரண்டோவின்  நோர்த் யோர்க் (North York) பகுதியில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன 14 வயதுச் சிறுமியைத் தேடும் பணிகளை றொரண்டோ பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எஸ்தர் (Esther) என்ற 14 வயதுச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில் பாத்தர்ஸ்ட் வீதி (Bathurst Street) மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் (Sheppard Avenue West) சந்திப்பிற்கு அருகிலுள்ள ‘ஏர்ல் பேல்ஸ்’ பூங்காவில் (Earl Bales Park) கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

5 அடி 2 அங்குலம் உயரமும், நடுத்தர உடலமைப்பும், பழுப்பு நிற முடியும் கொண்ட இச்சிறுமி, காணாமல் போன போது சாம்பல் நிற சுவட்டிங் காற்சட்டை மற்றும் பச்சை நிற நீளக்கைக் சட்டை அணிந்திருந்தார்.

அவர் காலணி அணிந்திருந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பூங்காப் பகுதியில் அடர்ந்த மரங்கள் மற்றும் பாதைகள் அதிகமாக இருப்பதால், தேடுதல் பணிக்காகப் பொலிஸார் தற்காலிக கட்டுப்பாட்டு மையம் (Command post) ஒன்றை அமைத்துள்ளனர்.

உடலின் வெப்பத்தை அறிந்துகொள்ளும் (Heat signatures) அதிநவீன ட்ரோன்கள், குதிரைப்படை மற்றும் கடற்படையினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி உணவு, பணம் அல்லது உதவி கேட்டு அருகில் உள்ள காபி கடைகளுக்கு வரலாம் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீட்டு கண்காணிப்பு கேமராக்களை (CCTV) ஆய்வு செய்யுமாறு பொலிஸ் அதிகாரி ஸ்காட் பிராட்பரி (Scott Bradbury) கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுமியைக் கண்டால் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கி, அவர் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை கண்காணிப்பில் வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles