றொரண்டோவுக்கு மஞ்சள் எச்சரிக்கை – கோடையின் முதல் கடுமையான வெப்ப அலை ஆரம்பம்!

றொரண்டோ (Toronto) நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) மஞ்சள் அளவிலான (Yellow-level) வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் கடுமையான வெப்பம் திங்கட்கிழமை பிற்பகல் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் நேரத்தில் வெப்பநிலை 30°C வரை உயரக்கூடும், அதேவேளை ஈரப்பதனுடன் சேர்த்து இது 36°C ஆக உணரப்படும் (Humidex).

றொரண்டோ, வோன் (Vaughan), ரிச்மண்ட் ஹில் (Richmond Hill), மார்க்கம் (Markham), ஹமில்டன் (Hamilton), ஹால்டன் (Halton), பீல் (Peel) மற்றும் நயாகரா (Niagara) ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெப்ப அலையைச் சமாளிக்க ரொறன்ரோ மாநகர சபை ‘வெப்ப நிவாரண உத்தியை’ (Heat Relief Strategy) செயல்படுத்தியுள்ளது.

இதன்படி, நார்த் யார்க் சிவிக் சென்டர் (North York Civic Centre), மெட்ரோ ஹால் (Metro Hall) உள்ளிட்ட 5 குளிரூட்டப்பட்ட பொது இடங்களின் வேலை நேரம் இரவு 9:30 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நகரம் முழுவதும் 168 நீர் விளையாட்டுத் திடல்கள் (Splash pads) திறக்கப்பட்டுள்ளதுடன், வீடற்றவர்களுக்காக மேலதிகமாக 112 தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 4 நடமாடும் தண்ணீர் விநியோக வாகனங்கள் முக்கிய சதுக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து ஒண்டாரியோ நோக்கி நகரும் வெப்பக் காற்றுத் தொகுதி காரணமாகவே இந்தத் திடீர் தட்பவெப்ப மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர் கிறிஸ்டினா கிரெட்ச்மேன் (Kristina Kretchman) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles