இந்த ஆண்டு கனடா தினம் (Canada Day) வாரத்தின் நடுப்பகுதியில் (புதன்கிழமை) வருவதையொட்டி, றொரண்டோ (Toronto) மாநகரம் முழுவதும் Ashbridges Bay இன் வருடாந்த வானவேடிக்கை உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் பொதுமக்களுக்கான திறந்திருக்கும் மற்றும் மூடப்பட்டிருக்கும் இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, Canada’s Wonderland (காலை 10 – இரவு 10 வரையும்), CN Tower (காலை 9 – இரவு 9:30 வரையும்), Ripley’s Aquarium, Casa Loma, Hockey Hall of Fame, ROM, AGO, Toronto Zoo மற்றும் Riverdale Farm (காலை 9 – இரவு 11 வரையும்) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், Eaton Centre ,Square One, Vaughan Mills, Pacific Mall மற்றும் Bramalea City Centre. (காலை 11 – இரவு 7 வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட சில Beer Store கிளைகள், Rabba Fine Foods, Eataly போன்ற சில அத்தியாவசிய மளிகைக் கடைகள் மற்றும் சில மருந்தகங்கள் (Shoppers Drug Mart, Rexall) (காலை 11 – மாலை 6) திறக்கப்படுமென கூறப்படுகிறது.
மேலும், TTC விடுமுறைக்கால அட்டவணைப்படியும், GO Transit சனிக்கிழமை அட்டவணைப்படியும் இயங்கும். என்பதோடு குப்பை சேகரிப்பு வழக்கம் போல் நடைபெறும்.
இதனிடையே, LCBO மதுபானக் கடைகள், வங்கிகள், அரச அலுவலகங்கள், தபால் சேவைகள் (No mail delivery) மற்றும் Toronto Public Library கிளைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், Yorkdale, Sherway Gardens, Fairview Mall, Scarborough Town Centre மற்றும் Dufferin Mall ஆகிய வணிக வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
