முதியவர்களை ஏமாற்றி நகைகளைப் பறித்த கும்பல்: றொரண்டோவில் இருவர் கைது!

றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) முதியவர்களை ஏமாற்றி, நகைகளைத் திருடி வந்த சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த இரு பெண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 26 அன்று, வுட்பைன் டவுன்ஸ் புலிவர்ட் (Woodbine Downs Boulevard) மற்றும் பின்ச் அவென்யூ (Finch Avenue) பகுதியில் காரில் இருந்த பெண் ஒருவரிடம் போலி நகைகள் மற்றும் போலி ஐபோனை விற்க முயன்றுள்ளனர்.

பின்னர், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த உண்மையான தங்கச் சங்கிலிகளைப் பலவந்தமாகப் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் (Romania) சேர்ந்த விசிட்டர் விசாவில் வந்த பேட்ரிசியா கிவியா (Patricia Ghivea – 20) மற்றும் லோரெடானா கார்டியன் (Loredana Gardian – 23) ஆகிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ‘Project Jetsetter’ எனப்படும் சர்வதேசக் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய “குற்றப் பயணிகள்” (Criminal tourists) என போலீஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் விசிட்டர் விசா மூலம் கனடாவுக்குள் நுழைந்து, முதியவர்களைக் குறிவைத்து வன்முறையுடன் கூடிய திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் ஏமாற்று வித்தையால் 80 முதல் 90 வயதுடைய முதியவர்கள் பலர் பாதிக்கப்பட்டு, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் வரவிருக்கும் ‘FIFA உலகக் கோப்பைகாரணமாகப் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்பின் தெரியாத “அளவுக்கு மீறிய பாசம் காட்டும்” (Overly friendly) நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Related Articles

Latest Articles