மியான்மர் இராணுவத்திற்கு நிதியுதவி – ‘இரத்த முத்துக்கள்’ விவகாரத்தில் சிக்கிய கனடிய நிறுவனம்!

கனடியர்களை பணிப்பாளர்களாக கொண்ட நிறுவனம் ஒன்று, மியான்மரின் (Myanmar) வன்முறை இராணுவ ஆட்சிக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ‘இரத்த முத்துக்கள்’ (Blood Pearls) வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாக் புலனாய்வில் தெரியவந்துள்ளது. 

டொராண்டோவைத் தளமாகக் கொண்ட Belpearl நிறுவனம், மியான்மர் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள Myanmar Pearl Enterprise (MPE) உடன் இணைந்து முத்து பண்ணைகளை நடத்தி வருகிறது. 

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு இராணுவ ஆட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் கனடியர்களான Marie Hajjar மற்றும் Pierre Hajjar ஆகியோர் இயக்குநர்களாக இருந்துள்ளனர். 

2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு மியான்மர் மீது கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 

இந்தத் தடைகளை மீறி குறித்த நிறுவனம் செயல்பட்டதா என்பது குறித்து RCMP விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

மியான்மரின் ‘தென்கடல் பொன் முத்துக்கள்’ (South Sea golden pearls) உலகப் புகழ்பெற்றவை. 

2021 முதல் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முத்துக்கள் ஏலம் விடப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தாங்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே நடப்பதாகவும், நெருக்கடி நிலை காரணமாகவே கனடிய பங்குதாரர்கள் விலகியதாகவும் Belpearl நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவிற்குள் இந்த முத்துக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles