நீதிமன்றத்தில் மோதல் – பொலிஸ் அதிகாரியைச் சாடிய அரச சட்டத்தரணி – வழக்கை இரத்து செய்தது நீதிமன்றம்!

றொரண்டோ (Toronto) நீதிமன்ற மண்டபத்தில் அரச தரப்பு சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

அதேநேரம் “நாங்கள் எமது ஆட்களைப் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறியதையடுத்து, ஒரு முக்கிய வழக்கை ஒன்ராறியோ (Ontario) நீதிமன்ற நீதிபதி அதிரடியாக இரத்து செய்துள்ளார்.

2024 ஓகஸ்ட் மாதம் மோட்டார் சைக்கிள் ஒன்றால் பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதப்பட்ட வழக்கில், பொலிஸ் அதிகாரி எடின் ஹசன்பாசிக் (Const. Edin Hasanbasic) வழங்கிய சாட்சியம் அரச தரப்புக்கு எதிராக அமைந்தது.

அரச சட்டத்தரணி மார்னி கோல்டன்பெர்க் (Marnie Goldenberg), குறித்த பொலிஸ் அதிகாரி உண்மையைச் சொன்னதற்காக அவரை நீதிமன்றத்தி்ற்குள் வைத்துத் திட்டியதுடன், அவரது சாட்சியம் “வெட்கக்கேடானது” மற்றும் “பரிதாபகரமானது” எனக் கூறியுள்ளார்.

“நாம் எமது ஆட்களைப் பாதுகாக்க வேண்டும்” (We protect our own) என்ற சட்டத்தரணியின் கருத்து, பொலிஸ் சமூகம் உண்மைக்குத் துணையாக இருக்கக்கூடாது என்ற தவறான செய்தியை அனுப்புவதாக நீதிபதி மாரா கிரீன் (Justice Mara Greene) தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியின் இந்தச் செயல் நீதித்துறை நேர்மையைப் பாதிக்கும் என்பதால், காலித் இத்ரிஸ் (Khalid Idris) மீதான ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பாதிக்கப்பட்ட அதிகாரி ஒருவரைப் பற்றிய மின்னஞ்சல் ஒன்றில் “நமது ஆட்களில் ஒருவர் காயப்பட்டுள்ளார்” என அனுப்பி, அதிகாரிகளைத் தூண்டிய மற்றுமொரு அதிகாரியின் செயலையும் நீதிபதி கண்டித்துள்ளார்.

அரச சட்டத்தரணிகள் மிக உயர்ந்த தரத்தைப் பேண வேண்டும் என்பதையும், நீதித்துறை நியாயத்தை உறுதிப்படுத்துவதையும் இந்தத் தீர்ப்பு நினைவூட்டுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles