தூக்கத்தில் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் ஒத்துப்போகும் இயல்பு : UTM ஆய்வில் தகவல்!

செல்லப் பிராணிகளான நாய்களுடன் (pet dogs) ஒரே கட்டிலில் உறங்குவது மனிதர்களின் தூக்கத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் மிசிசாகா (University of Toronto Mississauga – UTM) வளாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

UTM மானுடவியல் துறை மாணவர்களான மிங் ஃபெய் லி (Ming Fei Li) மற்றும் லவானியா நாகேந்திரன் (Lavania Nagendran) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் இரவு நேர நடவடிக்கைகளும் நாய்களின் தூக்க முறைகளும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை ஆராய்ந்தனர்.

இவ்வாய்வில், மனிதர்களின் தூக்கம் கலையும் போது அது நாய்களையே அதிகம் பாதிக்கிறது என்பதும், நாய்கள் அருகில் இருப்பது மனிதர்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், கட்டிலில் நாய்கள் இருப்பது ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றும், நாய்களுடன் நெருக்கமான உறவைக் கொண்ட மனிதர்களின் இரவு நேரச் செயல்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles