டொராண்டோவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை – 75 மி.மீ வரை கனமழை பெய்யவும் வாய்ப்பு!

டொராண்டோ (Toronto) மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜி.டி.ஏ (GTA) பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள்  தெளிவாக தென்படுவதில் ஏற்படும் சிக்கல் என்பன குறித்தும் சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமில்டன் (Hamilton), பீல் (Peel) மற்றும் நயாகரா (Niagara) உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று பகலில் வெப்பநிலை 15°C ஆக உயர்ந்து காற்று பலமாக வீசினாலும், இரவு வேளையில் 5°C ஆகக் குறையும்.

எவ்வாறாயினும், இன்று பகல் சற்றுத் தெளிவான வானிலை நிலவினாலும், அன்று இரவு முதல் உறைபனி மழை (Freezing rain) அல்லது பனிக் கட்டிகள் விழும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மீண்டும் வியாழக்கிழமை 15-30 மி.மீ வரை குளிர்ச்சியான மழை பெய்யக்கூடும் எனவும், வெள்ளிக்கிழமை மீண்டும் வெப்பநிலை 15°C ஆக உயர்ந்து வசந்தகால வானிலை திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles