மாநகரசபையின் புதிய புனரமைப்புத் திட்டங்களால், டொராண்டோ (Toronto) நகரின் மையப்பகுதியில் உள்ள Barbara Hall Park இல் அமைந்துள்ள எய்ட்ஸ் நினைவுச் சின்னம் அதன் முக்கியத்துவத்தை இழக்கக்கூடும் என ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1988-இல் நிறுவப்பட்ட இந்த நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, ஆனால் தற்போது இது பராமரிப்பின்றி சிதைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மாநகரசபை முன்மொழிந்துள்ள புதிய வடிவமைப்புகள் இந்த நினைவுச் சின்னத்தை ஒரு கலை அம்சமாக மட்டுமே கருதுவதாகவும், அதன் வரலாற்றுப் பின்னணியை மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் எதிர்த்து, David என்ற சமூக ஆர்வலர் Echoes என்ற பெயரில் ஒரு புதிய வடிவமைப்புத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இது நினைவிடத்தைச் சுற்றி ஒரு காடு போன்ற சூழலை உருவாக்கி, அதனைப் பூங்காவின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி ஒரு அமைதியான வழிபாட்டுத் தலமாக மாற்ற முற்படுகிறது.
Canadian AIDS Society உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த Echoes திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மாநகரசபை இது குறித்து மேலதிக ஆலோசனைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










