றொரண்டோ (Toronto) செர்ரி பீச் (Cherry Beach) கடற்கரை பகுதியில், காற்றடைக்கப்பட்ட படகு (Inflated boat) ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்து மாயமான நபரைத் தேடும் பணி இருள் சூழ்ந்ததன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக றொரண்டோ பொலிஸார் (Toronto Police) தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை மதியம் 1:45 மணியளவில் பொலிஸாருக்கு இந்த விபத்து குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படை பிரிவினர் (Marine unit), நீரில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் படகில் இருந்த ஒரு நாயும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகில் இருந்து நீரில் மூழ்கி மாயமான மற்றொரு நபரைத் தேடும் பணிகள் இரவு நேர இருள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
