சர்வதேச ஹேக்கிங் கும்பல் சிக்கியது – கனடியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பல மில்லியன் டொலர் ஏமாற்றம்!

சர்வதேச ஹேக்கிங் கும்பலைச் சேர்ந்த 25 பேரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது

கனடா உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, சுமார் 215 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் மோசடி செய்துள்ளனர்.

நைஜீரியாவுடன் (Nigeria) தொடர்புடைய இந்த மோசடி கும்பல், “பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்” (Business email compromise) எனப்படும் முறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மின்னஞ்சல்களை ஹேக் செய்து வந்துள்ளது.

அமெரிக்காவின் பல மாநிலங்கள் மற்றும் கனடா (Canada) உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 215 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் மின்னஞ்சல்களைக் கண்காணித்து, வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் நடக்கும்போது, உண்மையான நிறுவனத்தைப் போலவே போலியான மின்னஞ்சல்களை அனுப்பி பணத்தைச் செலுத்த வைத்துள்ளனர்.

இவ்வாறு பெறப்பட்ட பணம் ஒரு சிக்கலான வங்கி கணக்கு வலையமைப்பு மூலம் மாற்றப்பட்டுப் பின்னர் கிரிப்டோகரன்சி மற்றும் ஆடம்பரப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளது.

லொன் குட்மேன் (Lon Goodman) என்பவருக்குச் சொந்தமான New Dolton Currency Exchange என்ற நிறுவனம், வங்கிகளின் எச்சரிக்கையையும் மீறி இந்த மோசடிப் பணத்தை மாற்ற உதவியுள்ளது.

விசாரணையின் போது சுமார் 1.2 மில்லியன் டொலர் பணம் ​மற்றும் கிரிப்டோகரன்சி, Patek Philippe, Audemars Piguet, Richard Mille போன்ற பல இலட்சம் டொலர் பெறுமதியான ஆடம்பர கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ஜோர்ஜியாவின் (Georgia) லாரன்ஸ்வில் (Lawrenceville) பகுதியில் உள்ள பெரிய சொகுசு வீடும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஒலுவாபெமி மைக்கேல் அவோயேமி (Oluwafemi Michael Awoyemi), அருவான் டிரேக் (Aruan Drake) மற்றும் பீட்டர் ரீட் (Peter Reed) உள்ளிட்ட 25 பேர் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இணையம் வழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles