FIFA உலகக்கிண்ணம் – மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள கனடா தயார் நிலையில்!

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் FIFA உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள கனடா தீவிரமாகத் தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

றொரண்டோவின் செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனை (St. Michael’s Hospital) உள்ளிட்ட பல மருத்துவமனைகள், பாரிய விபத்துகள் அல்லது நெருக்கடி நிலைகளை (Mass casualty events) சமாளிப்பதற்கான “கோட் ஆரஞ்சு” (Code orange) ஒத்திகைகளை நடத்தி வருகின்றன.

போட்டிகளின் போது காயமடையும் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்குச் சிகிச்சையளிக்க 40 முதல் 50 வரையான பரமெடிக்கல் (Paramedics) பணியாளர்களை பீபா (FIFA) கோரியுள்ளது.

இதற்காக அண்டை நகரங்களின் உதவியைப் பெறுவது குறித்து ரொறன்ரோ நகர சபை ஆலோசித்து வருகிறது.

உலகக்கிண்ணப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 145 மில்லியன் டொலர் வரை நிதியுதவி அறிவித்துள்ளது.

இதில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) மற்றும் அருகிலுள்ள ஏனைய பிராந்திய பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

றொரண்டோவிற்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 230,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நகரின் வளங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளில் ஏற்படக்கூடிய அழுத்தங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“உலகெங்கிலும் இருந்து வருகை தரும் கோடிக்கணக்கான ரசிகர்களை வரவேற்கக் கனடா தயாராக உள்ளது” எனப் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.

கனடாவின் ரொறன்ரோ (Toronto) மற்றும் வான்கூவர் (Vancouver) ஆகிய நகரங்களில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles