காலாவதியாகும் கடைசி நேரத்தில் சரிபார்க்கப்பட்ட 40 மில்லியன் டாலர் லொட்டரி சீட்டு!

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாநிலத்தில் உள்ள கிரே கவுன்டீயில் (Grey County) விற்கப்பட்ட 40 மில்லியன் டாலர் பெறுமதியான லொட்டோ மெக்ஸ் (Lotto Max) பரிசுச் சீட்டு, அதன் காலாவதி காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் 28 அன்று குலுக்கல் செய்யப்பட்ட இந்த வெற்றிச் சீட்டின் ஓராண்டு செல்லுபடி காலம், புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையமொன்றில் அது சரிபார்க்கப்பட்டது.

குறித்த சீட்டைச் சரிபார்த்த நபரைத் தொடர்புகொண்டுள்ள ஒன்ராறியோ லொட்டரி மற்றும் சூதாட்டக் கழகம் (OLG), அவர் தான் உண்மையான உரிமையாளரா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

வெற்றி எண்கள்: 06, 14, 17, 19, 26, 43, 45 மற்றும் மேலதிக எண் 27 ஆகும். உரிமையாளர் உறுதி செய்யப்பட்ட பின்னரே உத்தியோகபூர்வமாக பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles