கனடாவில் பாரிய வாகனத் திருட்டு கும்பலின் முயற்சி முறியடிப்பு!

கனடாவின் B.C. (British Columbia) மாகாணத் துறைமுகம் ஒன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 3.8 மில்லியன் டாலர் மதிப்பிலான 43 திருடப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Project Road King எனும் பெயரில் Niagara Regional Police முன்னெடுத்த இந்த பாரிய தேடுதல் வேட்டையில், Ontario மாகாணத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் Keir McColl (39), Tudor Sopterian (32) மற்றும் Dejan Zlojo (43) ஆகிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், Nikola Scepanovic (58) என்பவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024 இல் தொடங்கப்பட்ட இந்த விசாரணையில் இதுவரை 30 பேர் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனத் திருட்டு மட்டுமன்றி, பல மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருட்கள் (Cocaine, Methamphetamine) மற்றும் சட்டவிரோத ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் கைதுகள் இடம்பெறலாம் என Chief Bill Fordy தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles