ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி – ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தரவுப் பதிவுகளில் ஏற்படும் தவறுகளால், ஒவ்வொரு ஆண்டும்  பெருமளவான கைதிகள் முறையாகத் திட்டமிடப்படாமல் தவறுதலாக விடுதலை செய்யப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை சுமார் 118 கைதிகள் இவ்வாறு ‘முறையற்ற’ (Improperly) முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 39 பேர் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தவறுகள் பெரும்பாலும் சிறைச்சாலை நிர்வாக மட்டத்திலான கவனக்குறைவு மற்றும் தொழில்நுட்பத் தவறுகளால் ஏற்படுவதாக அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சிறைச்சாலை நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தத் தவறுகள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், முதல்வர் டக் போர்ட் (Doug Ford) சிறைச்சாலை விரிவாக்கத் திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஒன்ராறியோ சிறைச்சாலைகள் 130 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25
Video thumbnail
கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!
01:31
Video thumbnail
றொரண்டோவில் வெப்ப வாரம் தொடங்குகிறது - வசந்த காலத்தில் உச்சத்தை எட்டும் வெப்பநிலை!
01:11
Video thumbnail
ஒன்டாரியோவில் கஞ்சா கடைகள் காலை 7 மணிக்கே திறக்க ஆலோனை?
01:12
Video thumbnail
கனடாவின் புதிய சட்டத்தால் அகதிகள் தவிப்பு - மனிதாபிமான உதவி செய்தவர்களுக்கும் ஆபத்து!
01:14
Video thumbnail
சுர்ரே விபத்தில் சிறுமி பலி - நீதிக்காகக் காத்திருக்கும் பெற்றோர்!
00:51

Related Articles

Latest Articles