கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ஏப்ரல் 20 முதல் லேபர் டே (Labour Day) வரை, எரிபொருள் மீதான மத்திய கலால் வரியைத் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் (U.S.-Iran) போரினால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களைக் கருத்தில் கொண்டு, மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி நீக்கத்தினால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 சென்ட்கள் வரையிலும், டீசலுக்கு 4 சென்ட்கள் வரையிலும் விலை குறையும்.
முன்னதாக நீக்கப்பட்ட கார்பன் வரியையும் சேர்த்தால், எரிபொருள் விலையில் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 28 சென்ட்கள் வரை சேமிக்க முடியும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் அரசுக்கு $2.4 பில்லியன் டொலர் செலவாகும்.
டீசல் மீதான வரி குறைப்பு, போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி குறைப்பு குடும்பங்களின் நிதி நெருக்கடிக்கு முழுமையான தீர்வாக அமையாது என்று சில நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவியர் (Pierre Poilevre), அரசு ஏற்கனவே கூடுதல் வரி விதித்துவிட்டு இப்போது தற்காலிக நிவாரணம் தருவது ஏமாற்று வேலை என்று விமர்சித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு அடுத்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.
இதன் மூலம் கனடியர்கள் கோடை காலம் முழுவதும் எரிபொருள் பயன்பாட்டில் ஓரளவு சேமிப்பை எதிர்பார்க்கலாம்.










