Mississauga-வில் Toronto Police மேற்கொண்ட நடவடிக்கையின்போது, 19 வயது இளைஞர் ஒருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஆகஸ்ட் 6 அதிகாலை, Delfi Road பகுதியில் நான்கு பேர் பயணித்த Mercedes காரை, துப்பாக்கி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக போலீசார் கண்காணித்து வந்தனர்.
அப்போது போலீஸ் வாகனங்களுக்கும் Mercedes காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காரை ஓட்டிய இளைஞர் உயிரிழந்தார்.
காரில் இருந்த மற்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்து Ontario SIU தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
