டொனால்ட் ட்ரம்ப்  – பாப்பரசர் மோதல் – செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இயேசு கிறிஸ்து தம்மை அரவணைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது பெரும் கருத்தாடல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்கால நடவடிக்கைகள் குறித்து பாப்பரசர் லியோ, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

தற்போது இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார்.

“இடதுசாரி தீவிரவாதிகளுக்கு இது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பாப்பரசர் லியோவிடம் ஈரானின் அணுஆயுத அபாயம் குறித்துக் கூறுமாறு வலியுறுத்தினார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), இறையியல் விவகாரங்களில் பேசும் போது பாப்பரசர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ட்ரம்ப்பிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ வாக்காளர்கள் ட்ரம்ப்பின் அரசியல் தளத்தின் மிக முக்கியப் பகுதியினராக இருப்பதால், இத்தகைய பதிவுகள் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பாபரசர் லியோ, எந்தவொரு குறிப்பிட்ட நாடும் சர்வதேச சட்டங்களை மீறுவதை அனுமதிக்க முடியாது என்று தனது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

Related Articles

Latest Articles