உலகளாவிய புதிய தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த ஒரேயொரு கனடிய பல்கலைக்கழகம்!

உலகளாவிய புதிய தரவரிசைப் பட்டியலின்படி, உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் மூன்று கனடிய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளதுடன், அவற்றில் ஒன்று முதல் 20 இடங்களுக்குள்ளும் நுழைந்துள்ளது.

U.S. News & World Report வெளியிட்ட சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களின் (Best Global Universities) தரவரிசையில், றொரண்டோ பல்கலைக்கழகம் (University of Toronto – U of T) கனடாவில் முதலிடத்தையும், உலக அளவில் 20ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆராய்ச்சிப் புகழ், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புத்தக வெளியீடுகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 105 நாடுகளைச் சேர்ந்த 2,438 பல்கலைக்கழகங்கள் ஆராயப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இப்பட்டியலில் கனடா அளவில் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (University of British Columbia – UBC) உலக அளவில் 42ஆவது இடத்தை பெற்றுள்ளது.

மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) உலக அளவில் 68ஆவது இடத்தையும் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

உலகளாவிய பட்டியலில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் (McMaster University) 150ஆவது இடத்தையும், அல்பர்ட்டா பல்கலைக்கழகம் (University of Alberta) 164ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

 

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles