கனடாவில் உடல் பருமன் உள்ளவர்களுக்கான தூக்கக் குறைபாட்டை குணப்படுத்தும் புதிய மருந்துக்கு அனுமதி!

உடல் பருமன் (Obesity) உள்ள பெரியவர்களுக்கு ஏற்படும் ‘அடைப்பு தூக்கக் குறைபாடு’ (Obstructive Sleep Apnea) எனப்படும் தற்காலிக சுவாசத் தடைப் பிரச்சினையை குணப்படுத்துவதற்காக, ‘ஸெப்வுண்ட்’ (Z#epbound) என்ற உடல் எடைக் குறைப்பு மருந்துக்கு ஹெல்த் கனடா (Health Canada) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜூன் 11 அன்று வழங்கப்பட்ட இந்த அனுமதியின் மூலம், கனடாவில் இந்த தூக்கக் குறைபாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே GLP-1 மருந்து இதுவாகும்.

தொண்டை தசைகள் தளர்வடைவதாலும் அல்லது சுவாசப்பாதையைச் சுற்றி அதிக கொழுப்பு திசுக்கள் சேர்வதாலும் இந்த சுவாசத் தடை ஏற்படுகிறது.

இது பகல்நேர தூக்கக் கலக்கம், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் என ரொறன்ரோவின் (Toronto) யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வொர்க் (University Health Network) மருத்துவர் மந்தீப் சிங் (Dr. Mandeep Singh) தெரிவித்துள்ளார்.

எலி லில்லி (Eli Lilly) நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மருந்தின் முக்கிய காரணியான ‘டீர்சிபடைட்’ (tirzepatide), பசியைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.

உடல் நிறை குறியீட்டெண் (BMI) 30 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இந்த ஊசியைப் பயன்படுத்தலாம் என ஹெல்த் கனடாவின் செய்தித் தொடர்பாளர் மேரி-பியர் புரேல் (Marie-Pier Burelle) தெரிவித்துள்ளார்.

எனினும், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ‘சிபாப்’ (CPAP) சுவாசக் கருவிக்கு இது உடனடி மாற்றீடு அல்ல என்றும், மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நிறுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles