உயிர் மாய்ப்பு சிக்கியையான MAID விளம்பரம் குறித்த வதந்தி – கனடிய அரசு மறுப்பு!

கனடா அரசாங்கம் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் (MAID) முறையை விளம்பரம் செய்வதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்த உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜெனிபர் (Jennyfer) என்ற பெண் செலோ இசைக்கருவியை வாசிப்பது போன்ற அந்த 25 விநாடி வீடியோ, கனடிய அரசாங்கத்தினுடையது அல்லவென தெரிவிக்கப்படுகிறது.

இது கியூபெக்கை (Quebec) தளமாகக் கொண்ட ‘சைமன்ஸ்’ (Simons) எனும் ஆடை விற்பனை நிறுவனத்தால் 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சார வீடியோவாகும்.

ஜெனிபர் ஹட்ச் (Jennyfer Hatch) என்ற அந்தப் பெண், ‘எஹ்லர்ஸ் டான்லோஸ் சிண்ட்ரோம்’ (Ehlers Danlos syndrome) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2022 அக்டோபரில் தனது வாழ்வை முடித்துக்கொண்டார்.

அவரது வாழ்க்கையின் அழகைக் சித்தரிக்கும் வகையிலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி, கனடா அரசு தற்கொலையைத் தூண்டுவதாக எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் தளங்களில் ஆயிரக்கணக்கானோர் தவறான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், சைமன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் சைமன்ஸ் (Peter Simons) ஏற்கனவே இது ஒரு வணிக ரீதியான விளம்பரம் அல்ல என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மனித உறவுகளின் பிணைப்பை உணர்த்தவே இது உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, இது அரசாங்கத்தின் விளம்பரம் என்று பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles