கனடா வழங்கக்கூடிய எந்தவொரு எரிசக்தி தயாரிப்பையும் வாங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் (Dinesh Patnaik) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஐந்து நாள் பயணமாக இந்தியாவிற்குச் சென்றுள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் (Crude), திரவ பெட்ரோலிய வாயு (LPG) மற்றும் இயற்கை எரிவாயு (LNG) என கனடா வழங்கும் அனைத்தையும் வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் அணுசக்தி துறைக்காக, (Saskatchewan) மாகாணத்திலிருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான யுரேனியத்தை வாங்குவதற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) காலத்தில் நிலவிய கசப்பான உறவுகள் மாறி, தற்போது மார்க் கார்னி (Mark Carney) மற்றும் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இருநாட்டு வர்த்தக உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.










