இரண்டு வயது சிறுவனைத் தாக்கிய நபருக்கு 6 மாத சிறை – பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிரடி தீர்ப்பு!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது காதலியின் இரண்டு வயது மகனைத் தாக்கிய குற்றத்திற்காக K.J.M. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘நானி கமெரா’ (Nanny camera) மூலம் இந்த நபர் சிறுவனின் கழுத்தை நெரிப்பதும், உதைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு நாட்களில் இருமுறை இத்தகைய தாக்குதல்களை அவர் நடத்தியுள்ளார்.

நீதிபதி தமேரா கோலின்ஸ்கி (Judge Tamera Golinsky) தனது தீர்ப்பில், “பாதுகாப்பாக இருக்க வேண்டிய படுக்கையறையில், நம்பிக்கைக்குரிய ஒருவரால் இழைக்கப்பட்ட இந்த வன்முறை அந்தச் சிறுவனின் எதிர்காலத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளபர்.

அதன்படி, ஆறு மாத காலச் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து, அவர் 18 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பில் (Probation) இருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் பின்னணி மற்றும் அவர் காட்டிய வருத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசுத் தரப்பு கோரிய ஒரு வருடத் தண்டனைக்கு பதிலாக ஆறு மாதங்களாகக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles