எதிர்ப்புக்குப் பணிந்த டக் போர்ட் – $28.9 மில்லியன் மதிப்புள்ள தனியார் ஜெட் விற்பனை!

ஒன்ராறியோ அரசாங்கம் தனது பயன்பாட்டிற்காக சுமார் $29 மில்லியன் டொலர் செலவில் வாங்கிய தனியார் ஜெட் விமானத்தை, பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

முதல்வரின் மாகாண மற்றும் சர்வதேச பயணங்களுக்காக ‘சேலஞ்சர் 650’ (Challenger 650) ரக விமானம் $28.9 மில்லியனுக்கு வாங்கப்பட்டது.

இது கியூபெக் (Quebec) அரசாங்கம் வாங்கிய விமானங்களை விட விலை குறைவானது என அரசு முதலில் நியாயப்படுத்தியது.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் தவிக்கும் வேளையில், அரசின் இத்தகைய ஆடம்பரச் செலவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் மரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles) மற்றும் லிபரல் தலைவர் ஜான் பிரேசர் (John Fraser) ஆகியோர் இதை ‘கிரேவி பிளேன்’ (Gravy Plane) எனச் சாடினர்.

“அரசு விமானத்திற்கான செலவு இப்போது சரியான நேரமல்ல என்பதை உணர்ந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ள டக் போர்ட், பொம்பார்டியர் (Bombardier) நிறுவனத்துடன் இணைந்து அந்த விமானத்தை விரைவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

2019-ஆம் ஆண்டில் அரசு விமானத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், வாகனத்தில் சென்று மக்களைச் சந்திப்பதையே விரும்புவதாகவும் கூறியிருந்த டக் போர்ட், தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles