டபெரின் கவுண்டியில் கோர விபத்து – 6 வயது சிறுவன் உயிரிழப்பு – பலருக்கு காயம்!

றொரண்டோவிற்கு வடக்கே உள்ள டபெரின் கவுண்டியில் (Dufferin County) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒரு கோர விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ஒன்ராறியோவின் முல்மூர் (Mulmur) பகுதியில் உள்ள கவுண்டி வீதி 17 மற்றும் கவுண்டி வீதி 19 சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆறு பேர் பயணித்த ஒரு கார் மற்றும் ஒரு பிக்கப் ட்ரக் (Pickup truck) ஆகிய இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

படுகாயமடைந்த 6 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். மேலும், 30 வயதுடைய ஒரு ஆணும், 2 வயது குழந்தையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வானூர்தி மூலம் றொரண்டோ அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ட்ரக் ஓட்டுநர் உள்ளிட்ட மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles