அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உடன் உறவைப் பேணுவது அத்தனை எளிதான காரியம் அல்ல என கனடிய பிரதமர் Mark Carney வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
Australia நாட்டின் Sydney நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Trump உடனான உறவில் மரியாதையை கடைபிடிக்கும், அதேவேளை அளவுக்கு மிஞ்சிய பணிவு (Obsequiousness) காட்டுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவெளியை விடவும் தனிப்பட்ட சந்திப்புகளின் போது Trump மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார் என Carney சுட்டிக்காட்டினார்.
Trump இடம் எது குறித்து பேசினாலும் வார்த்தைகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்றும், எதையும் ஆதாரமில்லாமல் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, உலகப் பொருளாதார மன்றத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை விட Trump-க்குக் கிடைத்த வரவேற்பு பெரியது என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட Carney, ஜனாதிபதிக்கு மக்கள் கூட்டத்தின் மீதுள்ள ஆர்வத்தையும் சூசகமாக சுட்டிக்காட்டினார்.
