Hamilton நகரில் உள்ள McMaster University பேராசிரியர்கள் நடத்திய புதிய ஆய்வொன்றில், அதிகப்படியான அல்ட்ரா-புராசஸ்டு (Ultra-Processed) உணவுகளை உண்பது மூளைப் பாதிப்பு, பக்கவாதம் (Stroke) மற்றும் மறதி நோய் (Dementia) போன்ற ஆபத்துகளை அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
JAMA Network Open இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 8,700-க்கும் மேற்பட்ட கனடியர்களின் உணவுப் பழக்கம் மற்றும் மூளை MRI ஸ்கேன்கள் பரிசோதிக்கப்பட்டன.
அதிகளவில் அல்ட்ரா-புராசஸ்டு உணவுகளை உண்பவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரிப்பதுடன், அறிகுறிகளற்ற பக்கவாதம் (Silent strokes) போன்ற மூளைப் திசு பாதிப்புகள் ஏற்படுவது உறுதியாகியுள்ளது என ஆய்வாளர்களான Russell de Souza மற்றும் Dr. Sonia Anand தெரிவித்துள்ளனர்.










