அமெரிக்க வரியால் பாதிப்பு: உள்நாட்டு கம்பளித் துறையை மேம்படுத்த கனடா தீவிரம்!

அமெரிக்க அதிபர் Donald Trump நிர்வாகம், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத (Greasy) கம்பளிக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால், கனேடிய கம்பளித் துறை பெரும் சவாலை ந்துள்ளது.

இதுவரை கனேடிய உற்பத்தியாளர்கள் கம்பளியைச் சுத்திகரிக்கும் (Scouring) வசதிகளுக்காக அமெரிக்காவையே நம்பியிருந்தனர்.

தற்போது இந்த வரிகளால் அந்த வணிக உறவு பாதிக்கப்பட்டுள்ளதால், U.K., Czech Republic மற்றும் China ஆகிய நாடுகளின் வசதிகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கனேடிய கம்பளி சர்வதேச அளவில் விரிவடைவதற்காகக் கனேடிய அரசு 160,000 டொலர்கள் நிதியுதவி அளிப்பதாக வேளாண் அமைச்சர் Heath MacDonald அறிவித்துள்ளார்.

Campaign for Wool in Canada மற்றும் Canadian Wool Council (CWC) அமைப்பின் தலைவர் Matthew Rowe கூறுகையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் (King Charles III) ஆதரவுடன் இயங்கும் இத்துறை, உள்நாட்டிலேயே பெரிய அளவிலான சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியை நிரந்தரமாகச் சமாளிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles