Toronto City Hall இல் திருமணச் சடங்குகள் ஜனவரி முதல் தற்காலிகமாக நிறுத்தம்!

கனடாவின் டொரண்டோ நகரில் அமைந்துள்ள டொரண்டோ சிட்டி ஹாலில் (Toronto City Hall) மேற்கொள்ளப்படவுள்ள பிரதான கட்டுமானப் பணிகள் மற்றும் பணியிட நவீனமயமாக்கல் திட்டங்கள் காரணமாக, எதிர்வரும் ஜனவரி 1 முதல் அங்கு நடைபெறும் திருமணச் சடங்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.

கடந்த 32 ஆண்டுகளாக இங்கு திருமணச் சடங்குகளை நடத்தி வந்த Ministerial Associates Inc. என்ற நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பதில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டதை விட முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே பதிவாகியுள்ள இவ்வாண்டுக்கான திருமணங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு மாற்று இடங்களை வழங்க உதவ தயார் என தெரிவித்துள்ள டொரண்டோ மாநகர சபை, மேலதிக தகவல்களுக்கு marriage@toronto.ca என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஓல்ட் சிட்டி ஹாலில் (Old City Hall) நடைபெறும் திருமணப் பதிவுகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles