Toronto மற்றும் GTA பகுதிகளில் மஞ்சள் நிற காற்று – தரத்தின் தன்மை குறித்தும் எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்!

Toronto மற்றும் GTA வின் சில பகுதிகளில் நிலவும் மந்தமான குளிர்கால காலநிலை காரணமாக, காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக Environment Canada மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புதன்கிழமை இரவு காற்றின் தரக் குறியீடு (Air Quality Health Index) 7 ஆக உயர்ந்துள்ளதால், இது அதிக ஆபத்துள்ள நிலையாகக் கருதப்படுகிறது.

காற்றில் நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் நுண் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

கண்கள் மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை மழை அல்லது பனிப்பொழிவு ஏற்படும் போது காற்றின் தரம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles