தொழில்நுட்பத் துறையில் திறமையான பணியாளர்களைக் கொண்ட வட அமெரிக்காவின் முன்னணி நகரங்களில் Toronto மீண்டும் தனது வலுவான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
2026 Scoring Tech Talent அறிக்கையின்படி, வட அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப திறன் சந்தைகளில் Toronto மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. Toronto-வுக்கு முன்னால் San Francisco Bay Area முதலிடத்திலும் Seattle இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Toronto கடந்த ஆண்டும் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டும் அந்த இடத்தைத் தக்கவைத்துள்ளது. New York Metro நான்காவது இடத்திலும் Austin ஐந்தாவது இடத்திலும் Washington D.C. ஆறாவது இடத்திலும் உள்ளன.
இந்த அறிக்கையில் கனடாவுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
வட அமெரிக்காவின் முதல் 15 Tech Talent சந்தைகளில் ஆறு கனடிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Toronto 3ஆம் இடம், Vancouver 9ஆம் இடம், Waterloo Region 10ஆம் இடம், Montreal 11ஆம் இடம், Ottawa 14ஆம் இடம் மற்றும் Calgary 15ஆம் இடத்தைப் பிடித்துள்ளன.
கனடாவின் தொழில்நுட்ப வேலைவாய்ப்பும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் கனடாவின் Tech Talent employment 7.6 சதவீதம் அதிகரித்து, 91,300 புதிய தொழில்நுட்ப வேலைகள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக Artificial Intelligence — AI துறையின் வளர்ச்சியும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் AI திறன்களைக் கொண்ட தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
கனடாவின் AI பணியாளர்களில் 60 சதவீதம் Toronto, Montreal மற்றும் Vancouver ஆகிய மூன்று நகரங்களில் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், புதிய Tech வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய சந்தைகளில் Toronto முன்னணியில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
Software developers முதல் data scientists, computer systems managers மற்றும் hardware engineers வரை பல்வேறு தொழில்நுட்பத் துறைகளின் திறன், வேலைவாய்ப்பு வளர்ச்சி, கல்வி, ஆராய்ச்சி முதலீடு உள்ளிட்ட 13 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.
