Online Dating மூலம் அறிமுகமாகி நேரில் சந்திக்கச் சென்ற ஒருவர், மிரட்டப்பட்டு 6,000 டொலர் பணத்தை இழந்ததாகக் கூறப்படும் சம்பவம் Brampton-ல் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ள Peel Regional Police, இதேபோன்ற சம்பவங்களில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட நபரை messaging platform ஒன்றின் ஊடாக “Manisha Sharma” என்ற பெயரைப் பயன்படுத்திய ஒருவர் தொடர்புகொண்டுள்ளார்.
இருவரும் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதத்தில் Brampton-ன் Torbram Road மற்றும் Peter Robertson Boulevard பகுதிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் basement apartment-க்கு பாதிக்கப்பட்டவர் சென்றுள்ளார்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் ஆண் ஒருவர் அறைக்குள் நுழைந்ததாகவும், பின்னர் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டப்பட்டு e-transfer மூலம் 6,000 டொலர் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Brampton-ஐ சேர்ந்த 35 வயதான Harwinder Singh மற்றும் 23 வயதான Riya Riya ஆகிய இருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இருவரும் ஓகஸ்ட் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டனர், தலா இரண்டு வலுக்கட்டாயமாக சிறைப்படுத்திய குற்றச்சாட்டுகள், கொள்ளை மற்றும் இரண்டு மிரட்டல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
Casual date என்ற பெயரில் இதேபோன்று வேறு நபர்களும் இலக்காக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
இதனால் இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டவர்கள், வெட்கம் அல்லது அச்சம் காரணமாக அதனை மறைக்காமல் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு Peel Regional Police கேட்டுக்கொண்டுள்ளது.
