கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தின் கீழ் Work Permit பெற அல்லது புதுப்பிக்க காத்திருக்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய மாற்றத்தை IRCC அறிமுகப்படுத்தியுள்ளது.
LMIA முடிவுக்காக காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள், Work Permit விண்ணப்பத்தை முதலில் சமர்ப்பித்துவிட்டு, பின்னர் approved LMIA-வை வழங்குவதற்கான கால அவகாசம் 60 நாட்களிலிருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆகஸ்ட் 21, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பொதுவாக Temporary Foreign Worker Program — TFWP கீழ் Work Permit வழங்கப்படுவதற்கு positive அல்லது neutral LMIA தேவைப்படுகிறது.
ஆனால், சில சந்தர்ப்பங்களில் employer-இன் LMIA விண்ணப்பம் இன்னும் processing-இல் இருக்கும்போதே, கனடாவில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர் தனது Work Permit விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதுவே concurrent processing எனப்படுகிறது.
இந்த வசதியைப் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன.
விண்ணப்பதாரரின் தற்போதைய Work Permit இரண்டு வாரங்களுக்குள் காலாவதியாக இருக்க வேண்டும். Employer முழுமையான LMIA விண்ணப்பத்தை ஏற்கனவே சமர்ப்பித்திருக்க வேண்டும்; அதற்கான முடிவு இன்னும் வெளியாகாமல் இருக்க வேண்டும். மேலும் LMIA விண்ணப்பம் கடைசி நேரத்தில் அல்லாமல், processing time-ஐ கருத்தில் கொண்டு போதுமான முன்கூட்டிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்களின் Work Permit application-ஐ IRCC 90 நாட்கள் வரை hold செய்து, அந்தக் காலத்திற்குள் positive அல்லது neutral LMIA ஆதாரத்தை இணைக்க வாய்ப்பு வழங்கும்.
மேலும், தற்போதைய Work Permit காலாவதியாகும் முன்பே புதிய Work Permit விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தகுதியானவர்கள் maintained status மூலம் முடிவு வரும் வரை கனடாவில் தொடர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதற்கு அவர்கள் கனடாவிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும்.
LMIA processing சில நேரங்களில் பல மாதங்கள் நீடிக்கக்கூடிய நிலையில், Work Permit காலாவதியாகி வேலை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த கூடுதல் 30 நாள் அவகாசம் முக்கிய நிவாரணமாக அமையலாம்.
ஆனால் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது — இந்த 90 நாள் அவகாசம் அனைத்து Work Permit applicants-க்கும் அல்ல; IRCC-ன் concurrent processing நிபந்தனைகளை பூர்த்தி செய்யும், கனடாவுக்குள் இருந்து விண்ணப்பிக்கும் TFWP applicants-க்கு மட்டுமே இது பொருந்தும்.
