Edmonton-ஐ அதிர வைத்த $73,000 Caregiver Fraud!

கனடாவின் Edmonton நகரில், மனநலப் பாதிப்புடன் வாழ்ந்த ஒரு பலவீனமான வாடிக்கையாளரிடமிருந்து 73,000 டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக ஒப்புக்கொண்ட 35 வயது பெண்ணுக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Shum Shabat Yousouf என்ற 35 வயது பெண், Contentment Social Services Foundation என்ற இலாப நோக்கற்ற அமைப்பில் program manager மற்றும் housing worker ஆக பணியாற்றியிருந்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய Christopher Domoslai என்பவருக்குமனநலப் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்ததுடன், அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க அவர் CSSF அமைப்புடன் சேவை ஒப்பந்தம் ஒன்றில் 2022 இல் இணைந்தார்.

அதன்படி, தங்குமிடம், நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு, அறை சுத்தம் செய்வதற்கான உதவி, மருத்துவ சந்திப்புகளுக்கான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்காக அவர் மாதம் 1,450 டொலர் செலுத்தி வந்தார்.

ஆனால் 2023 ஆரம்பத்திலிருந்து, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமான தொகைகளுக்கு bank draft எடுக்குமாறு Yousouf அவரை வழிநடத்தியுள்ளார். 

Online banking பயன்படுத்துவதற்கு பாதிக்கப்பட்டவரால் தனியாக முடியாத நிலையில், அவரது online banking-ஐ அமைப்பதற்கும் password பதிவு செய்வதற்கும் Yousouf உதவியிருந்தார்.

பின்னர் அதே ஆண்டில், அவரது அனுமதியின்றி bank account-ஐ அணுகி பணத்தை மாற்றத் தொடங்கியதாக வழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து e-transfer மூலம்,  $73,000-க்கும் மேல் வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. 

2023 டிசம்பரில் Christopher Domoslai-யின் சகோதரி அவரது bank account-களைச் சரிபார்த்தபோதே, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

தனது தொடர்பை மறைக்க Yousouf முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் CSSF நிறுவனம் பாதிக்கப்பட்டவரின் வாடகையைக் கூட செலுத்தாமல் விட்டிருந்ததால், அவர் நிலுவை வாடகை காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திற்கும் தள்ளப்பட்டார்.

இதையடுத்து 2024 ஜூனில் அவரது குடும்பம் அந்த அமைப்புடனான தொடர்பை முடித்துக்கொண்டது.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் சேமிப்பு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை அறிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதும் அவரது பலவீனத்தைச் சுரண்டியதும் மிகக் கடுமையானது எனக் கூறி Yousouf-க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்தார். 

மேலும் $73,000 restitution தொகையை 2035 டிசம்பர் 1ஆம் தேதிக்குள் தவணை முறையில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் $69,000 forfeiture தொகையாக 2037 ஆகஸ்ட் 21க்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles