மழை குறைகிறது! Toronto Weekend Weather

Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது.

வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாக்கள் மற்றும் வெளிப்புற நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு ஏற்ற வகையில் இந்த வார இறுதி வானிலை அமையும் என கூறப்படுகிறது. 

இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 22 பாகை செல்சியஸை எட்டும். வானம் பெரும்பாலும் தெளிவாகவும், லேசான காற்றும் காணப்படும்.

சனிக்கிழமை ஓரளவு மேகமூட்டத்துடன் காற்று சற்று பலமாக வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 19 பாகை செல்சியஸாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். காலை நேரத்தில் சில பகுதிகளில் மட்டும் சிறிய மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 20 பாகை செல்சியஸாக இருக்கும்.

மழை பெய்தாலும் அது காலை நேரத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் வெப்பநிலை சற்று குறையக்கூடும். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மீண்டும் மழைக்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

Related Articles

Latest Articles