கனடிய குடியுரிமையை உறுதிப்படுத்தும் Proof of Citizenship Certificate விண்ணப்பங்களை முடித்து வைக்கும் வேகம் June மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக புதிய IRCC தரவுகள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 5,800 விண்ணப்பங்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், June மாதத்தில் அது 3,040 ஆக குறைந்துள்ளது. அதாவது processing வேகம் பாதியாக குறைந்துள்ளது.
இதனால் முடிவுக்காக காத்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது.
May 31 நிலவரப்படி 82,020 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், June 30-க்குள் அது 99,520 ஆக உயர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் 121,800 என்ற நிலையை தொட்டுள்ளது.
இந்த திடீர் தாமதத்துக்கு முக்கிய காரணமாக IRCC மேற்கொண்ட citizenship certificate review சுட்டிக்காட்டப்படுகிறது.
June மாதத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் 6,500 citizenship certificates-க்கான supporting documents-ஐ IRCC மீளாய்வு செய்தது. இதனால் புதிய citizenship-by-descent applications-ஐ முடிவு செய்வது ஒரு காலப்பகுதிக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், Canadian citizenship by descent விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் Proof of Citizenship Certificate-களுக்கான விண்ணப்பங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் வாழும் Canadian வம்சாவளியினரிடமிருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிகரிக்கும் விண்ணப்பங்களும் June மாத review-வும் இணைந்து, Canadian Citizenship Certificate பெறுவதற்கான காத்திருப்பு மேலும் நீளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.










