திங்கட்கிழமை அதிகாலை Etobicoke பகுதியில் உள்ள Gardiner Expressway இல் இரண்டு வெவ்வேறு இடங்களில் பிரதான நீர் விநியோகக் குழாய்கள் (Water main breaks) உடைந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4:14 மணியளவில் Grand Avenue அருகே நீர் கசிந்து ஓடுவதாக Toronto Police அறிவித்துள்ளது.
ஒரு வெடிப்பு நெடுஞ்சாலையின் வலதுபுறத்திலும் (Right shoulder) பகுதியிலும், மற்றொன்று கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய பாதைகளுக்கு இடையிலும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு திசைகளிலும் பாதைகளின் இடைமறிக்கப்பட்டு, வாகனங்களை மிக மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய கடும் குளிரால் சாலைகளில் நீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக (Icy roads) மாற வாய்ப்புள்ளதால், ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
City of Toronto ஊழியர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது குறித்த காலநேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.










