E-Scooter அபாயம் அதிகரிப்பு: 10 குழந்தைகள் உயிரிழப்பு – Ontario-வில் 6 மரணங்கள்!

கனடாவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே E-Scooter, E-Bike உள்ளிட்ட மின்சார வாகனங்களால் நிகழும் கடுமையான விபத்துகள் குறித்து வெளியான புதிய அறிக்கை கவலையை எழுப்பியுள்ளது.

இந்த அறிக்கையின்படி கடந்த ஆண்டில் கடுமையான காயங்களுடன் தொடர்புடைய 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 10 மரணங்கள், 12 ICU சிகிச்சை, மேலும் 26 பேர் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையில் தங்கியிருந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழப்புகளில் ஆறு Ontario-வில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காயங்களில் 47 சதவீதம் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயங்களாகும்.  

அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். 

பதிவான விபத்துகளில் E-Scooter-களே அதிகமாக தொடர்புபட்டிருந்ததாக அறிக்கை கூறுகிறது. மேலும் பெரும்பாலானவர்கள் helmet அணியாமல் இருந்தனர்.

E-Scooter ஒரு சாதாரண விளையாட்டுப் பொருள் அல்ல. அதிக வேகத்தில் செல்லக்கூடிய வாகனம். எனவே வயது வரம்பு, helmet பயன்பாடு மற்றும் உங்கள் நகரின் சட்டவிதிகளை பெற்றோர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

Related Articles

Latest Articles